விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!

Filed under: தமிழகம் |

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பருவமழையால் குறைந்துள்ளது.

இதனையடுத்து தக்காளியின் விலை தொடர்ந்து உயரத் தொடங்கி உள்ளது. டந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120-ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளரான அக்கீம் என்பவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திருமண பரிசாக மணமக்களுக்கு தக்காளியை வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இன்று கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை ஆகி வருகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.79-க்கு விற்பனையாகுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.