விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

Filed under: சினிமா |

இன்று திரையரங்குகளில் வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை விடியற்காலையிலேயே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கலவையான விமர்சனம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதனிடையே சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ரசிகர்கள் வந்தனர். அப்போது மயிலாடுதுறை, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து 8 இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளனர். அவர்கள் மது அருந்தி வந்ததால், திரையரங்கு உரிமையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், விஜய் ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், விஜய் ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. போலிசார் கண் முன் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.