விடாமுயற்சி ஷூட்டிங்கில் அதிரடி ஆக்‌ஷன்!

Filed under: சினிமா |

மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் நடித்து வருகிறார். “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் அஜீத் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார். இப்போது “விடாமுயற்சி” ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20ம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ளனர். அஜீத், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம். படக்குழுவினர் ஏற்கனவே அஸர்பைஜானுக்கு சென்றுவிட்டனர். அஜீத் நேற்று அஸர்பைஜானுக்கு சென்றார். அங்கு இப்போது பல ஸ்டண்ட் கலைஞர்களோடு அவர் மோதும் ஆக்‌ஷன் காட்சியை எடுத்து வருகிறாராம் மகிழ் திருமேனி. படப்பிடிப்பில் கலந்து கொள்ள அர்ஜுன் மற்றும் திரிஷா ஆகியோர் விரைவில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.