“விடுதலை’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Filed under: சினிமா |

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் திரைப்படமான ‘விடுதலை’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, “விடுதலை” படத்தின் ரீ ரிக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கினார். சமீபத்தில் இளையராஜா இசையமைப்பில், தனுஷ் பாடிய பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் மார்ச் 31ம் தேதி “விடுதலை” படத்தின் முதல் பாகமும், அடுத்து மூன்று மாதம் கழித்து ஜூலையில் இரண்டாம் பாகமும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மார்ச் 8ம் தேதி இப்படதின் இசை மற்றும் டிரெயிலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.