விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் பட்டியல் ரெடி!

Filed under: தமிழகம் |

விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அனுபவ அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உட்பட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.