விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள்!

Filed under: இந்தியா |

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகளிடம் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிஸ்ராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டில்லி விமானத்தில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. டில்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஐதராபாத்திற்கு புறப்பட்டது. இதில் ஏறிய ஒரு ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே, பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணியையும் அவருடன் இருந்தவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.