விராட்கோலி அதிரடி அரைசதம் விளாசல்!!!

Filed under: விளையாட்டு |

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, அதிரடி அரைசதம் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிக நீண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், 20 ஓவர் தொடரை இந்திய அணியும் வென்றது குறிப்பிடத்தக்கது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியுள்ளது.
போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே தொடக்க வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷா, டக்-அவுட்டாகி வெளியேறினார்.


அவரைத் தொடர்ந்து இன்னொரு ஓப்பனரான மயான்க் அகர்வாலும் 17 ரன்கள் எடுத்துப் பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் ஜோடி போட்ட கேப்டன் விராட் கோலியும், செத்தேஷ்வர் புஜாராவும் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தனர். குறிப்பாக புஜாரா, 159 பந்துகள் விளையாடி 43 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். ஆனால் கோலியோ, தொடர்ந்து விளையாடி அரைசதம் கண்டார்.
இந்தப் போட்டியோடு இந்தியா திரும்புகிறார் கோலி. தனக்கும், தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளதால், மனைவியுடன் இருக்க விராட் முடிவெடுத்துள்ளார்.