வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டண உயர்வ- குறித்து அறிவித்த நிலையில், தற்போது வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எந்த விதமான மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிக குறைந்த அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது. மற்ற மாநிலங்களில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயரும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.