வெங்கட் பிரபு – அரவிந்த் சாமி கூட்டணி!

Filed under: சினிமா |

நாக சைதன்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றது. நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான “தேங்க் யூ” பிளாப்பானதால் இப்படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு சமீபத்தில் ரிலீசானது. இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளார். தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் அரவிந்த் சாமி இணைந்துள்ளார்.