வெளியானது நயன்தாரா படத்தின் புதிய டீஸர்

Filed under: சினிமா,தமிழகம் |

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கிவருகிறார்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.

நயன்தாராவின் 36வது பிறந்தநாளான இன்று நெற்றிக்கண் படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. நயன்தாரா கதை சொல்வதுடன் டீஸர் துவங்குகிறது.

நெற்றிக்கண் நயன்தாராவின் 65வது படமாகும்.