வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மிக கனமழையின் அளவு சீர்காழியில் பதிவகாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.


நேற்று சீர்காழியில் ஒரே நாளில் மட்டும் 44 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய மழை மேக வெடிப்பு காரணமல்ல என்றும் பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாகவே இந்த மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், கோயில்களுக்கும் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. நகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.