200 ஆண்டு பழமையான ஓவியம்!

Filed under: உலகம் |

அமெரிக்காவில் தஞ்சையின் காணாமல் போன 200 ஆண்டு பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் புராதன பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணாமல்போன 200 ஆண்டுகள் பழமையான சரபோஜி சிவாஜி ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஓவியத்தை இந்தியா கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.