ஏற்கனவே செந்தில் பாலாஜியின் காவல் 23 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 24வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது 24-வது முறை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பினர் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மார்ச் 11ம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.