2570 செவிலியர்கள் பணி நியமனம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை,மே 8 


கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று தினங்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என தமிழக அரசு அறிவுப்பு.