ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் நேற்று ஆடிய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
ஐபிஎல் 24வது போட்டி நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றது.
முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.