50 ரன்கள் அடித்து இரண்டு சாதனைகளை படைத்த விராட் கோலி!

Filed under: விளையாட்டு |

50 ரன்கள் அடித்து இரண்டு சாதனைகளை படைத்த விராட் கோலி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 56 ரன்கள் எடுத்த விராட் கோலி இரண்டு சாதனைகளை வசப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 56 ரன்கள் எடுத்தார். 100 ரன்கள் எடுத்தார் சச்சின் மற்றும் பான்டிங்கின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி 50 ரன்கள் அடித்தே இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.

இன்று கோலி தனது 61ஆவது அரை சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 104 முறை 50 ரன்களை கடந்தவர் என்றவர் சாதனையை வசப்படுத்தியுள்ளார். ஏனென்றால் அவர் 43 சதம் அடித்துள்ளார். அதன் மூலம் 104 முறை 50 ரன்களை கடந்துள்ளார்.

இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் காலிஸ் 103 முறை ஒரு நாள் போட்டிகளில் 50 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார் . அதனை கோலி முறியடித்துள்ளார். காலிஸ் 17 சதம், 86 அரை சதம் அடித்துள்ளார்.

அடுத்ததாக சொந்த மண்ணில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர் 14,192 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் 13,117 ரன்கள், காலிஸ் 12,305 ரன்கள், குமார் சங்ககாரா 12,043 ரன்கள், மகிலா ஜெயவர்தனே 11,679 ரன்கள் எடுத்துள்ளனர்.

அதுவே கோலி சதம் அடித்திருந்தால் கேப்டனாக அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை செய்திருப்பார். கோலி கேப்டனாக 41 சதங்களுடன், ரிக்கி பாண்டிங்குக்கு இணையாக உள்ளார். மேலும் சொந்த மண்ணில் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் 20 சதங்களுடன் சச்சின் இருக்கிறார். கோலி இதுவரை 19 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினை சமன் செய்துவிடுவார்.