7 பேர் விடுதலை, பள்ளிகள் திறப்பு ஆகியவற்றில் அரசாங்கத்தின் நிலை என்ன அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் !

Filed under: தமிழகம் |

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் அது பின்வருமாறு :-தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் தமிழகத்தில் உள்ளது. நிபுணர் குழு, மருத்துவக் குழு பரிந்துரை அடிப்படையிலேயே முடிவெடுக்கப் படுகிறது. பள்ளி திறப்பு தொடர்பான எதிர்க்கட்சி கருத்து பரீசிலிக்கப்படும்.

 கழக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தான். எங்கள் பலம் அனைவருக்கும் தெரியும். கழகம் எக்கு கோட்டை, மோதுபவர்கள் மண்டை தான் உடைபடும். பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சாதி, மத, இன, மொழி சண்டை கிடையாது.சமத்துவத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் பாரபட்சமின்றி இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும், கலவரம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், உச்சநீதிமன்றத்தின் கேள்வியை கவனத்தில் கொண்டு ஆளுநர் செயல்படுவார். தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இனியும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்