9 பாலங்களை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை இன்று திறந்தார்.

 

தலைமைச் செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது பாலங்களை இன்று திறந்து வைத்துள்ளார்.

இதன் காரணமாக, இரயில்வே கடவுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களால் இனி இரயில்வே கடவுகளில் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறைவதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.