தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். ரூபாய் 20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். நெல்லையிலும் விவசாயிகளுக்குப் பிரம்மாண்ட சந்தையைக் கட்ட அரசு பரிசீலிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பணி சிறக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும். […]
சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது . போகிற வருபவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்கு அளிக்கும் . முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி மொழி […]
Continue reading …தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று 7 பேர் உயிரிழந்துள்னர். இதனால் […]
Continue reading …நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு […]
Continue reading …சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பியுள்ள தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.. ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.. அமமுகவை அதிமுகவோடு இணைத்து கட்சியை தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டு வர சசிகலா முயற்சித்து வருகிறார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறனர்..துணை முதல்வர் […]
Continue reading …டெல்லி: மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 28-ம் தேதி விழுப்புரம் வருகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து […]
Continue reading …தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன அதிமுக நேற்று காலை விருப்ப மனுவை பெற்றுக் கொள்ள அறிவித்துள்ளதோடு வேட்புமனு ரூபாய் […]
Continue reading …கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாங்கிய ரூ.3 கோடிக்கு கணக்கு இருக்கிறதா எனக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அக்கட்சியினர். நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இரண்டு தொகுதிகளும், 15 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது. தொகுதிக்கு, 6 கோடி வீதம் 12 கோடி ரூபாயை செலவழித்து விட்டு மீதம் 3 கோடி ரூபாயை, தி.மு.க.,விடமே திருப்பி கொடுத்து விட்டதாக நிர்வாகிகள் சொல்லி […]
Continue reading …சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக அழைத்து சுமார் 10 நிமிடங்கள் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று விழா முடிந்த உடன் நேரு ஸ்டேடியத்தில் உள்ள விருந்தினர் அறைக்கு பிரதமர் மோடி நேராக சென்றார். உள்ளே சென்றதும் தனது உதவியாளரிடம் கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உள்ளே அழைக்குமாறு கூறியுள்ளார் மோடி. இதனை அடுத்து தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது- அவரும் அடுத்த நிமிடமே மோடி […]
Continue reading …தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான பாட திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் மாணவர்களும் , […]
Continue reading …