Home » Archives by category » தமிழகம் (Page 74)

சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

Comments Off on சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு புயல் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. தற்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 […]

Continue reading …

விஜய் நெல்லை மக்களை சந்திக்கிறாரா?

Comments Off on விஜய் நெல்லை மக்களை சந்திக்கிறாரா?

சமீபத்தில் நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மத்திய மற்றும் மாநில அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்து வருகிறது. நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா […]

Continue reading …

கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் அடக்கம்!

Comments Off on கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் அடக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் […]

Continue reading …

ஈரோடு நெல்லை தினசரி ரயில் சேவை!

Comments Off on ஈரோடு நெல்லை தினசரி ரயில் சேவை!

இந்திய ரயில்வே வாரியம் ஈரோடிலிருந்து நெல்லைக்கு தினசரி விரைவு ரயில் சேவை இனி செங்கோட்டை வரை நீடிக்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ரயில் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், “ரயில் எண். 16846 திருநெல்வேலி – ஈரோடு எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோடு சென்றடையும். […]

Continue reading …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

Comments Off on தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இத்தகவல் […]

Continue reading …

மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

Comments Off on மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்பு சில நாட்களில் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கலந்து கொண்டாலும், அவர் அந்நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம் சாட்டினர். […]

Continue reading …

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

Comments Off on தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

நாளை காங்கிரஸ் கட்சி வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்க ஆரம்பித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில […]

Continue reading …

உதயநிதி குறித்து அண்ணாமலை சாடல்!

Comments Off on உதயநிதி குறித்து அண்ணாமலை சாடல்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக திமுக அரசியல் எப்படியாவது சண்டை போட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற திட்டத்தில் ஓட்டைகள் போட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சென்னை வெள்ளம் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றை மிக மோசமாக கையாளப்பட்டது என அனைவருமே பேச ஆரம்பித்துள்ளனர். மழையால் […]

Continue reading …

பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

Comments Off on பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட இரண்டு செயலிகள் 2023ம் ஆண்டுக்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகள் பேஸ்புக் அலுவலகத்திற்கு சொந்தமாக உள்ளன. கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை ஐந்து நாட்களில் 10 கோடி பேர் இன்ஸ்டால் செய்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இச்செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்தனர். 2023ம் ஆண்டில் அதிகமாக […]

Continue reading …

திமுகவில் இன்னொரு வாரிசா?

Comments Off on திமுகவில் இன்னொரு வாரிசா?

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் உள்ள ஒரு சில வாரிசுகள் ஏற்கனவே வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளனர். தற்போது கே.என்.நேருவின் மகனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் பொன்முடி மகன் ஆகியோர் ஏற்கனவே எம்பிகளாக இருக்கின்றனர். தற்போது கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று […]

Continue reading …