அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரது ஆதரவும் யாருக்குமில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ஆனால், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் சத்தியமூர்த்திபவன் கட்டிடத்திற்கு அவர் வருகை தந்த போது அவரை முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுன கார்கேவுக்குதான் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.