Home » Entries posted by Murthy P
Entries posted by Murthy

நாகையில் மாவட்ட அளவிளான பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டி !

செவாலிய அவர்களின் டாக்டர் ஜி.எஸ் பிள்ளை ஐயா நினைவாக 2022 ஆம் ஆண்டிற்கான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் 11.04-2022 தொடங்கியது, இப்போட்டிகளில் நாகப்பட்டினம் காரைக்கால், தஞ்சை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவை சதரங்கபோட்டி ஆண்கள் பிரிவில் முதலிடம் நபராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளி நாகை, இரண்டாமிடம் அரசு உயர்நிலைப்பள்ளி பேரளம், மூன்றாமிடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி நாககுடையன், சதரங்க பெண்கள் பிரிவில் முதலிடம் கிரஸண்ட் […]

நாகூர் அருகே இளைஞர் கொலை !

Comments Off on நாகூர் அருகே இளைஞர் கொலை !
நாகூர் அருகே இளைஞர் கொலை !

நாகை, ஜூலை 8 நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டபோது, மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் என்பவருடைய மகன் அசாருதீன் (19) என்ற இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தபட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து […]

Continue reading …

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!

Comments Off on மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!
மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!

நாகப்பட்டினம்,ஜூன் 19 நாகப்பட்டினம் அருகே வேளாங்கன்னி மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிபவர் வினோத். நேற்று தெற்கு பொங்கைநல்லூரில் மின்கசிவு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளநிலை பொறியாளர் மீது வேளாங்கன்னி போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Continue reading …

அதுக்குள் … பாட்டிலை நுழைத்த வாலிபர் !

Comments Off on அதுக்குள் … பாட்டிலை நுழைத்த வாலிபர் !
அதுக்குள் … பாட்டிலை நுழைத்த வாலிபர் !

நாகை மாவட்டம் நாகூர் ஆஸ்பத்திரி ரோடு மாப்பிள்ளை தெருவை சேர்ந்த பக்கிரிசாமி என்ற இளைஞர் மது பிரியர். நேற்று அதிக மது அருந்தியுள்ளார், குடிபோதையில் “குவார்ட்டர் “பாட்டிலை தன் ஆசனவாய் வழியாக உள்ளே விட்டுள்ளார். பாட்டில் முழுமையாக சென்றமையால் வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் துடிதுடித்துள்ளார். உடன் நாகை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சேர்த்து ஸ்கேன் செய்து பார்த்த போது முழு பாட்டில் உள்ளே இருப்பது தெரிய வந்து டாக்டர்கள் அதர்ச்சி அடைந்து பக்கிரிசாமிக்கு […]

Continue reading …

கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !

Comments Off on கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !
கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !

நாகப்பட்டினம், மே 27 நாகப்பட்டினம் கால்நடை துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக கணேசன் வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கத்தரி புலம் கால்நடை மருத்துவர் ராஜா என்பவர் உதவி இயக்குனரிடம் கடந்த 20/05/2020 அன்று தனக்கு வேலையின் ஊதிய சான்றிதழ் கேட்டுள்ளார், இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெறும் போது அங்கு வேலை பார்க்கும் கிளார்க் செல்வராஜ் இருவரையும் சமாதானம் செய்யும்போது ராஜா […]

Continue reading …

டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!

Comments Off on டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!
டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!

நாகை, மே 5மூர்த்தி தமிழ்நாட்டில் ஊரடங்கு சட்டத்தில் மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பிரியர்கள் ஒரு குவாட்டர் 300க்கு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வருகின்றனர். அருகில் உள்ள காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வர முயற்சித்தாலும் அந்த அரசாங்கம் கேமிரா மூலம் கண்காணித்து வருவதால் கடையில் உரிமையாளர்களின் உரிமை ரத்தாகி விடும் என்ற பயத்தில் உள்ளார்கள். நாகப்பட்டினம் அருகே பொய்யூர் கிராமத்தில் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன் தன் வீட்டில் எரிசாராயம் காய்ச்சுகின்ற தொழிலை ஆரம்பித்துள்ளார். […]

Continue reading …

மாற்று திறனாளிகளுடன் உள்ள கோவில் ஊழியருக்கு உதவி!

Comments Off on மாற்று திறனாளிகளுடன் உள்ள கோவில் ஊழியருக்கு உதவி!
மாற்று திறனாளிகளுடன் உள்ள கோவில் ஊழியருக்கு உதவி!

நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி ஐந்து மாற்றுத் திறனாளி குடும்ப நபர்களுடன் வசித்து வரும் திருமணஞ்சேரி கோவிலின் ஊழியருக்கு, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, நிவாரண உதவிகளை செய்துள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி என்ற கிராமத்தில், புகழ்பெற்ற கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருமணம் தடை உள்ளவர்கள், இக்கோவிலுக்கு சென்று வந்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் பணிபுரியும் முரளி என்பவரின் குடும்பத்தினர் ஐந்து பேரும் மாற்றுத் திறனாளிகள். கொரோனா வைரஸ் காரணமாக […]

Continue reading …

நாகை : சீருடை பணியாளர்கள் குடும்பம் பரிதவிப்பு!

Comments Off on நாகை : சீருடை பணியாளர்கள் குடும்பம் பரிதவிப்பு!
நாகை : சீருடை பணியாளர்கள் குடும்பம் பரிதவிப்பு!

நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி நாகப்பட்டினத்தில் டி.எஸ்.பி.அலுவலகத்தின் பக்கத்தில் காவல்கள் அங்காடி உள்ளது. அதன் அருகில் காவலர்கள் குடியிருப்புகள் இருப்பதால் காவலர்கள் பணியில் இருக்கும் போது குடும்பத்தினர் அங்காடியில் மளிகை பொருள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருந்தது. இதில் சிறை காவலர்கள், வன விலங்குதுறை, தீயணைப்பு துறை, காவல் துறை போன்றவர்கள் பயன் பெற்று வந்தனர். ஆயுதப்படையின் டி.எஸ்.பி யின் மேற்பார்வையில் இயங்கி வந்த அங்காடி, கடந்த ஒரு மாத காலமாக […]

Continue reading …

நாகையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Comments Off on நாகையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
நாகையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

நாகை ஏப்ரல் 24 பி.மூர்த்தி (எ) சிற்பி நாகை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவப்பிரகாசம் என்பவர், லஞ்சம் பெற்ற புகார் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவப்பிரகாசம். ஜெயங்கொண்டாம் ஊரை சேர்ந்த இவர், கஞ்சா, சாராயம் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இவர், இங்கு காவல் ஆய்வாளராக பணியை தொடங்கிய நாள் முதல், புகார் அளிப்பவர்களிடம் இருந்து, லஞ்சம் பெறாமல் நடவடிக்கை […]

Continue reading …

நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!

Comments Off on நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!
நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!

மயிலாடுதுறை, ஏப்ரல், 21 தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜன் மீது தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகாவுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்.  சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் மீது தேவையற்ற விமர்சனங்கள் செய்துள்ளார். இதற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன […]

Continue reading …
Page 1 of 212