Home » Archives by category » தமிழகம் (Page 19)

மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு!

Comments Off on மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு!

கள்ளச்சாராயம் அருந்தியதால் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தப்பியோடினார். அவர் தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி நேற்று தப்பியோடினார். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இருந்தனர். இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று […]

Continue reading …

கள்ளச்சாராய மரணம்! அதிமுக வெளிநடப்பு!

Comments Off on கள்ளச்சாராய மரணம்! அதிமுக வெளிநடப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்துக்குப் பின் விவாதிக்கலாம் எனத் தெரிவிக்க அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய […]

Continue reading …

முதலமைச்சர் பதவி விலக வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!

Comments Off on முதலமைச்சர் பதவி விலக வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!

எடப்பாடி பழனிசாமி போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் முதலமைச்சர் பதவியிலிருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை என கூறி அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது. போதை பொருள் விவகாரத்தில் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளபக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி, “நேற்று தூத்துக்குடியில் 8 […]

Continue reading …

கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Comments Off on கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கை […]

Continue reading …

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அண்ணாமலையின் திடுக் தகவல்!

Comments Off on கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அண்ணாமலையின் திடுக் தகவல்!

அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முன்னாள் எஸ்பிக்கு விடுத்த மிரட்டல் தான் காரணம் என்றும், அவர் விருப்ப ஓய்வில் சென்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மோகன்ராஜ். அவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். […]

Continue reading …

நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் ஸ்டாலின்!

இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். சட்டசபையில் இன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட […]

Continue reading …

திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்து குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை, சட்டசபையில் மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நெஞ்சை பதற வைக்கும் மரணம் குறித்து பேசாவிட்டால் எம்எல்ஏ-ஆக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். சட்டசபையில் […]

Continue reading …

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை!

Comments Off on மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-க்கு முன்பு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே […]

Continue reading …

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு?

Comments Off on விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 14ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஜூலை 10ம் தேதி […]

Continue reading …

காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஷசாராய பலி குறித்து கருத்து!

Comments Off on காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஷசாராய பலி குறித்து கருத்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது கூட கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவம் நடந்தது என சட்டப்பேரவையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கள்ளச்சாராய விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாதபடி வலுவான சட்டம் உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தியவர்கள் இப்போது மக்களுக்காக பேசுகிறார்கள், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் […]

Continue reading …