சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு!

Filed under: உலகம் |

கொரோனா பரவல் இடையே சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இதன் பின்பு பிரதமர் லீ சியென் லூங் சென்ற வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவையை அறிவித்தார். இந்த அமைச்சரவையில் 37 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ஒன்பது பெண்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் பிரதமராகவும் மற்றும் துணைப் பிரதமராகவும் ஹெங் சுவீ கியெட் பதவியேற்றனர்.

மேலும், அந்த 37 அமைச்சர்களில் ஐந்து தமிழர்கள் முக்கியமான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனார். அந்த ஐந்து தமிழர்கள் தர்மன் சண்முகரத்னம், கா.சண்முகம், எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் இந்திராணி ராஜா ஆகியோர் பதவியேற்றனர்.