Home » Posts tagged with » Chennai

இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலனை […]

ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

Comments Off on ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கை வெட்டப்படும் என்றும், ஆ.ராசா வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது என காட்டமாக கூறினார். காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ.ராசா என்று விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ராசாவும் கனிமொழியும் திகார் சிறையில் இருந்தார்கள் […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பிடிபட்டது.

Comments Off on சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம் பிடிபட்டது.

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கத்தை, சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னை வரும் இன்டிகோ விமானத்தில் பெண் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், இன்று  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த உமாகொலுசு பீவி, மகாரிபா பீவி, மதுரையைச் சேர்ந்த குணசுந்தரி ஆகிய பெண் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. பசை வடிவிலான தங்கம் 11 பாக்கெட்டுகளை இவர்கள் தங்கள் உடையில் மறைத்து வைத்திருந்தனர். அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவற்றில் 604 கிராம் அளவுக்கு சுத்த தங்கம் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.31.41 லட்சம். மகாரிபா பீவி என்பவர் மீது ஏற்கனவே, கடத்தல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்பட்டார்.             விமானத்திலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பயணி இருக்கை ஒன்றின் கீழ், துணிப் பை ஒன்று மீட்கப்பட்டது. அதில் 802 கிராம் எடையில் 5 தங்க துண்டுகள் டேப் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.   இவற்றின் மதிப்பு ரூ.41.71 லட்சம். இந்தப் பையை யாரும் உரிமை கோரவில்லை. மொத்தம் 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.73.12 லட்சம் என சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். Share on: WhatsApp

Continue reading …

ஓய்வூதியம் பெறுவார்களா நீங்கள் உங்களுக்கு ஒரு முக்கியதகவல் !! 

Comments Off on ஓய்வூதியம் பெறுவார்களா நீங்கள் உங்களுக்கு ஒரு முக்கியதகவல் !! 

தமிழகஅரசில் பணி ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழகஅரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் பென்தாரர்கள் தங்களது பென்சன் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும் தங்களின் கடன் பெற்று இருந்தால் அதன் விவரம் முழுவதும் அறிந்து […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈகே-0542 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது முர்சின் இப்ராகிம், 42,  பரக்கத் அலி சதுருதீன், 45, ஆகிய பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வாயிலில் இடைமறிக்கப்பட்டனர். அவர்களை விசாரித்த போது தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களை சோதனையிட்டபோது 166 கிராம் எடையுடைய இரண்டு பொட்டலங்களில் இருந்து 146 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது. மேலும் 66 கிராம் எடையிலான இரண்டு தங்கத் துண்டுகளும், 30 கிராம் எடையிலான ஒரு தங்கச் சங்கிலியும் கண்டறியப்பட்டன. […]

Continue reading …

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளைகள்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Comments Off on தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளைகள்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொச்சி உள்பட ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளைகள் அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது இதை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு […]

Continue reading …

இன்று உடன் சென்னைக்கு 381 வயது; வந்தோரை வாழ வைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

Comments Off on இன்று உடன் சென்னைக்கு 381 வயது; வந்தோரை வாழ வைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

இன்று உடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு 381 வயதை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை.. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார். Share on: WhatsApp

Continue reading …

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நோயாளிகளில் 81% குணமடைந்தனர்!

Comments Off on சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நோயாளிகளில் 81% குணமடைந்தனர்!

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழ்நாட்டில் தினதோறும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில் சென்னையில் இதுவரை 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 14,56 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை 70 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 81 சதவீதமாகவும் மற்றும் உயிரிழப்பு விகிதம் […]

Continue reading …

சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூ.400 கோடி செலவு – ஆணையர் பிரகாஷ்!

Comments Off on சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூ.400 கோடி செலவு – ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறிது: சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 400 கோடியில் கொரோனா பரிசோதனைக்கு ரூபாய்.200 கோடியும் மற்றும் களப்பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதற்கு ரூபாய்.30கோடியும் செலவாகி உள்ளது. சென்னையில் 90 சதவீத மக்கள் தான் முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால், அனைத்து மக்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது […]

Continue reading …

கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

Comments Off on கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வேலைக்கு திரும்ப 72 காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில் சென்னையில் இதுவரை ஆயிரத்து 1,434பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 813 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் உள்பட காவலர்கள் வரை 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Continue reading …
Page 1 of 3123