புது டெல்லி, ஏப்ரல், 29 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக இன்று உலக அளவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய அளவில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, பொருட்கள் கிடைப்பதை தொடர்ந்து நிலைநிறுத்துவது, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடா நாட்டில் தற்போது வசித்து வரும் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய […]