சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மற்றும் மதிமுகவிற்கான தொகுதிகள், திமுக வேட்பாளர்கள் பட்டியல் போன்றவற்றை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி […]