சென்னையில் பொதுமக்களுக்கு நாளை முதல் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புரெவி புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதேபோல, சென்னையில் மழையால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள குடிசை வாழ் மக்களுக்கு உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சென்னை குடிசைவாழ் […]
இன்று உடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு 381 வயதை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை.. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
Continue reading …மருத்துவமனையில் வேலையின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூபாய் 5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு வேளையில் பணிபுரிந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா சென்ற 27ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த தகவல் அறிந்த உடன் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து தன்னலம் கருதாமல் வேலை […]
Continue reading …சென்னை : பேரிடர் காலங்களில் மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக செயல்பட்டு வருபவர் நம் தமிழக முதல்வர் பாசமிகு அண்ணன் எடப்பாடியார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்தோடு விளக்கம். இந்த அசாதாரண சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமக்களின் பங்காளிப்பாக 100 ரூபாயிலிருந்து நிவாரண நிதியாக வழங்கலாம் என்று அறிக்கை கொடுத்து உதவுகின்ற உள்ளங்களை ஊக்குவிக்கின்ற வகையில் வாய்ப்புகளை உருவாக்கி […]
Continue reading …தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இவருடன் சேர்த்து 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜ் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசியக் காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். முன்வரிசையில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.
Continue reading …