Home » Archives by category » சென்னை

வாகன விழிப்புணர் பிரசாரமே தண்டனை!

எந்த இடத்தில் பைக் சாகசம் நிகழ்வு நடந்ததோ அந்த இடத்திலேயே விழிப்புணர்வில் ஈடுபட்டார் யூடிபர் கோட்லா பினோய். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் கூட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பல முறை எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் சென்னை, அண்ணாசலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல […]

பிரபல ரவுடி படுகொலை!

Comments Off on பிரபல ரவுடி படுகொலை!

ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை பள்ளிக்கரணையில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பள்ளிக்கரணையிலுள்ள அம்பேத்கர் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்கள் ஆயுதங்களோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அதற்குள் அங்கு ரவுடிகள் தப்பி சென்று விட்ட நிலையில் புதர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனை கொண்டு […]

Continue reading …

மாணவன் கைது!

Comments Off on மாணவன் கைது!

சென்னை தி.நகரில் ஓடும் பஸ்ஸில் செருப்பு காலால் ஸ்கேட்டிங் செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். சமீப காலமாக தமிழகத்தில் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எவ்வளவு கூறினாலும், ஆசிரியர்கள் எடுத்துரைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். சென்னையில் சில நாட்களுக்கு முன், தி.நகரிலிருந்து, செம்மஞ்சேரி செல்லும் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி […]

Continue reading …

சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

Comments Off on சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

நன்றாக வேலை செய்த காரணத்தினால் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உடன் வேலை செய்த கட்டிட தொழிலாளியை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த வேளச்சேரி என்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் கட்டிட வேலை செய்து வந்தார்கள். அப்போது ஆனந்தன் என்ற கட்டிட தொழிலாளி மட்டும் நன்றாக வேலை செய்ததால் அவரை மேஸ்திரி பாராட்டியதோடு அவ்வப்போது கூடுதலாக அவருக்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் அதே […]

Continue reading …

11ம் வகுப்பு மாணவி தற்கொலை!

Comments Off on 11ம் வகுப்பு மாணவி தற்கொலை!

11ம் வகுப்பு படிக்கும் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆசிரியர் கொடுத்த பள்ளி பாடங்களை சரியாகப் படிக்கவில்லை என்பதால், அவரை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி, தன் வீட்டிற்குப் பள்ளிக்குச் செல்வதுபோல் கிளம்பி பின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, துப்பட்டாவால் […]

Continue reading …

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்!

Comments Off on ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்!

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை சென்னையில் உள்ள மூன்று வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை ஒரு வழித்தடமும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை […]

Continue reading …

தி.நகரில் ஆகாய மேடை!

Comments Off on தி.நகரில் ஆகாய மேடை!
தி.நகரில் ஆகாய மேடை!

பயணிகளின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டதை பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியான ஷாப்பிங் பகுதியான தி.நகரில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் நெருக்கடியான ரங்கநாதன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் மிகவும் திக்கு முக்காடி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பஸ் நிலையம் வரை பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. […]

Continue reading …

1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்!

Comments Off on 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. நாளை தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் நாளை  1000  இடங்களில் சிறப்பு காய்ச்சல் […]

Continue reading …

செல்பி மோகத்தால் இருவர் பலி!

Comments Off on செல்பி மோகத்தால் இருவர் பலி!

செல்போனில் செல்பி எடுக்கும் மோகத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த 2 பேர் பலியான சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையையடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20 வயது), மற்றும் அவரது நண்பர் ரிச்சர்ட் என்பவரும் சேர்ந்து நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அந்த ஏரியை சுற்றி பார்த்து விட்டு இருவரும் மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் […]

Continue reading …

தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

Comments Off on தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறப்பட்டார்கள். தெரு நாய்களின் தொல்லையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நிலைமை விபரீதமாவதற்கு […]

Continue reading …
Page 1 of 47123Next ›Last »