Home » Archives by category » உலகம்

5வது முறையாக மீண்டும் அதிபரான புதின்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் புதின். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் தலைவராக புதின் இருந்து வருகிறார். புதிய அதிபரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் மீண்டும் புதின் அபார வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 88 சதவீதம் […]

ஜோதிகா படத்தின் வசூல் 100 கோடி!

Comments Off on ஜோதிகா படத்தின் வசூல் 100 கோடி!

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகா, பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். பின்னர் “36 வயதினிலே” படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” திரைப்படத்தில் நடித்தார். அப்படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. பாலிவுட்டில் “ஷைத்தான்” படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இப்படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். […]

Continue reading …

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

Comments Off on மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கைது செய்து வருகிறது. இந்த தொடர் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர் சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய மாநில அரசுகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் […]

Continue reading …

LCA போர் விமானம் விழுந்து நொறுங்கியது!

Comments Off on LCA போர் விமானம் விழுந்து நொறுங்கியது!

ராஜஸ்தான் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகிறது. இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். இந்த விமானம் முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் முதன்முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue reading …

தமிழக மீனவர்கள் மார்ச் 22 வரை காவல்! இலங்கை நீதிமன்றம்!

Comments Off on தமிழக மீனவர்கள் மார்ச் 22 வரை காவல்! இலங்கை நீதிமன்றம்!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களை 22 பேரை மார்ச் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க […]

Continue reading …

ஆஸ்கர் விருதுகளை அள்ளும் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்!

Comments Off on ஆஸ்கர் விருதுகளை அள்ளும் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்!

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் “ஓப்பன்ஹெய்மர்.” இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகி இருந்தது இத்திரைப்படம். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கோல்டன் க்ளோப் மற்றும் பாஃப்டா உள்ளிட்ட பல விருது விழாக்களில் கலந்துகொண்டு […]

Continue reading …

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

Comments Off on ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

திடீரென நேற்றிரவு சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதால் உலகம் முழுதும் உள்ள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர். டுவிட்டர் உள்ளிட்ட மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. மார்க் அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் திடீரென ஏன் முடங்கியது. சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரு மணி […]

Continue reading …

கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய பிரான்ஸ்!

Comments Off on கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய பிரான்ஸ்!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல் பிரான்ஸில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது. கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை பதிவு செய்த நாடாக பிரான்ஸ் […]

Continue reading …

துபாய் வாழ் தமிழர்களின் சாதனை நிகழ்ச்சி!

Comments Off on துபாய் வாழ் தமிழர்களின் சாதனை நிகழ்ச்சி!

துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி நடத்திய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்துள்ளனர். நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி […]

Continue reading …

உணவுக்காக காத்திருந்த பொதுமக்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!

Comments Off on உணவுக்காக காத்திருந்த பொதுமக்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!

ஈவு இருக்கமின்றி கண்மூடித்தனமாக தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலியர்கள் […]

Continue reading …
Page 1 of 65123Next ›Last »