Home » Archives by category » தமிழகம்

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து.. தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சூழல் தவிர்க்கப்பட்டு, சிறிய அளவிலான விபத்தாக முடிந்தது. சிறு காயங்களுடன் பயணிகளும், ஓட்டுநரும் தப்பினர். […]

ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

Comments Off on ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் தீப்பிடித்ததால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் டயரில் பற்றிய தீயை அணைத்த பின்னர், மதுரை பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்லும் வேறு அரசு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Continue reading …

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

Comments Off on திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம். பெங்களூரு கெம்பேகவுடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.செ.ஆசைதம்பி அவர்கள் இன்று 12-05-2024 அதிகாலை 5:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

Continue reading …

சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

Comments Off on சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் சிவகாசியில் நேற்று பட்டாசு சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு அறைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயண புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு பட்டாசு ஆலை ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப் […]

Continue reading …

நுங்கு வாங்கிய தகராறில் மனைவி, மகளை குத்திய கணவன்!

Comments Off on நுங்கு வாங்கிய தகராறில் மனைவி, மகளை குத்திய கணவன்!

நுங்கு வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியைச் சேர்ந்த தனசேகரன் லாரி டிரைவராக பணிபுரிகிறார். தனசேகரனுக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி, ஷபானா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வரும் நிலையில் வெளியே கடைக்கு சென்ற யாசினி வரும்போது நுங்கு வாங்கி வந்துள்ளார். ஆனால் […]

Continue reading …

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

Comments Off on 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தற்போது 11ம் வகுப்பு பொது தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் 11ம் வகுப்பு பொது தேர்வு நடந்தது. இந்த பொது தேர்வில் தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி […]

Continue reading …

ஏஐ பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் படிப்புக்கு டிமாண்ட்!

Comments Off on ஏஐ பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் படிப்புக்கு டிமாண்ட்!

ஏஐ பாடங்களில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அதிகளவில் சேர ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். அதிகளவிலான மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த படிப்புக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது ஏஐ பட்டதாரிகளை தேடி வருகின்றன. அதனால் இந்த படிப்புக்கு திடீரென டிமாண்ட் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வணிகவியல் படிப்புக்கும் நல்ல டிமாண்ட் உள்ளதாகவும் […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் பரபரப்பு!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால், “மோடி மீண்டும் பிரதமரானால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கைது செய்து விடுவார், அதற்கான திட்டம் இருக்கிறது” என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் இருந்த நேற்று வெளியானார். இன்று நடந்த பிரம்மாண்டமான பேரணியில் அவர் பேசும்போது, “அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி கைது செய்வார், அவர் மீண்டும் பிரதமர் ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் […]

Continue reading …

பத்ம விருதுடன் பேரணி நடத்த பிரேமலதா திட்டம்!

Comments Off on பத்ம விருதுடன் பேரணி நடத்த பிரேமலதா திட்டம்!

சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதிக்கு கேப்டன் விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுடன் பிரேமலதா விஜயகாந்த் பேரணியாக செல்ல முயன்ற போது அவரை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குடியரசு தலைவரிடம் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். அந்த விருதை விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக சென்னை வந்தவுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதி வரை பேரணி நடத்த திட்டமிட்டார். ஆனால் அனுமதியின்றி பேரணி நடத்தக் கூடாது என […]

Continue reading …

பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் செல்ல தடையா?

Comments Off on பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் செல்ல தடையா?

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளி வாகனங்களை தற்போது அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பள்ளி பேருந்துகளில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்றும் இதனால் எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படுகிறது […]

Continue reading …
Page 1 of 322123Next ›Last »