
டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 21ம் தேதி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இவ்வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. […]
Continue reading …
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்தும் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.பி.நட்டா தமிழகத்தின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நீக்கவும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் காத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் […]
Continue reading …
தந்தை மற்றும் உறவினர்களே 13 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, குட் டச், பேட் டச் பற்றி பாடம் நடத்தியபோது, அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி பயிற்சி நடத்துபவரிடம் தெரிவித்தார். அதில் அச்சிறுமி தனது தந்தை, தூரத்து உறவினர் முறையிலான சகோதரன் மற்றும் மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக […]
Continue reading …
நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் மக்களவை தேர்தலிலும் அந்த கட்சி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியை கூட வெல்ல […]
Continue reading …
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உட்பட தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. […]
Continue reading …
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் கட்டப்பட்டு வந்தது. இக்கட்டிடம் தற்போது இடித்து தள்ளப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியல் என குற்றம் சாட்டியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சீதா நகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் உள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடிக்கப்பட்டு அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. […]
Continue reading …
நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விஷசாராயத்திற்கு பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்ததோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. கள்ளச் சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமினை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் அவர் சிறைக்கு சென்றார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் […]
Continue reading …
கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலங்கை அணியின் முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குளிர்பான நிறுவனத்தை தொடங்கவுள்ளார். குளிர்பானம், திண்பண்ட தயாரிப்பு நிறுவனத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் அங்கு நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடக அரசு போதிய […]
Continue reading …
பெண் காவலரை துப்பாக்கி முனையில் எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் காவல் நிலையத்தில் பவானிசென் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளாராம். பவானிசென் குற்றம் உறுதியானதால் […]
Continue reading …