
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினர் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சி நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 21-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு, இந்த ஆண்டு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் […]
Continue reading …
ஆந்திர மாநில துணை முதலமைச்சராக ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வி சந்தித்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், […]
Continue reading …
சமீபத்தில் மிகப்பெரிய ஹாட் ஆப் டாப்பிக்கானது முன்னாள் ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா பற்றிய செய்திகள்தான். இது குறித்து நடிகை ரோஜா “500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த பங்களா அரசுக்கு சொந்தமானது என்றும் ஜெகன்மோகனுக்கு சொந்தமானது என்று தவறான தகவல் பரவி வருகிறது. ருஷிகொண்டா என்பது ஒரு சுற்றுலா மையம் என்பதால் அங்கு சுற்றுலாத்துறை கட்டிடங்கள் கட்டுவது தவறா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் […]
Continue reading …
நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் பாஜக சார்பில் நின்று வென்று அமைச்சரானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியுள்ளார். பாஜக கூட்டணி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் கேரளாவில் முதல் முறையாக ஒரு சீட்டை மலையாள நடிகர் சுரேஷ் கோபி மூலம் கைப்பற்றி தடம் வைத்துள்ளது. சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்றதால், அவருக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா […]
Continue reading …
தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்ததாகவும் சென்னையிலிருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், “நிர்வாக காரணங்களுக்காக […]
Continue reading …
சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சரக்கு ரயில் மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி […]
Continue reading …
500 கோடி ரூபாய் மதிப்பில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா கட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அவரால் எதிர்க்கட்சியை அந்தஸ்தை கூட பிடிக்க முடியவில்லை. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெகன்மோகன் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் 500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் […]
Continue reading …
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், “மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் […]
Continue reading …
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக மேலாக விசாரணை நடைபெற்றது. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கடந்த மார்ச் 15ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், […]
Continue reading …