Home » Archives by category » இந்தியா (Page 169)

குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

Comments Off on குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் !

மூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவம், இன்ஜினீயரிங் போன்ற தொழில் படிப்புகள்போல 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய பார் கவுன்சில் தேர்தலுக்கும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டப் படிப்பு படிக்கவும், வழக்கறிஞராக பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தில் எஸ்.எம்.ஆனந்த முருகன் […]

Continue reading …

ஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் !

Comments Off on ஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் !

ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இந்தியர்கள் உட்பட 805-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் […]

Continue reading …

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !

Comments Off on முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணையித்திருந்தது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள்: * “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு […]

Continue reading …

ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

Comments Off on ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர், முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் […]

Continue reading …

கலங்கரை விளக்கம் சாய்ந்தது !

Comments Off on கலங்கரை விளக்கம் சாய்ந்தது !

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான். ‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு […]

Continue reading …

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார் !

Comments Off on முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார் !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 84.ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன், […]

Continue reading …

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: கூட்டணி தலைவர்களுடன் மோடி இன்று முக்கிய ஆலோசனை !

Comments Off on நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: கூட்டணி தலைவர்களுடன் மோடி இன்று முக்கிய ஆலோசனை !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வியாபம், லலித் மோடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் மழைக்கால தொடரில் கடும் புயல் வீசும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மத்தியப் பிரதேசத்தை மையம் கொண்டுள்ள வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் வழக்குகளில் தொடர்புடைய […]

Continue reading …

5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட்: நாளை விண்ணில் பாய்கிறது – 62 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது !

Comments Off on 5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட்: நாளை விண்ணில் பாய்கிறது – 62 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது !

பிரிட்டன் நாட்டின் செயற்கை கோள்களை ஏந்தி பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் நாளை இரவு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதற்கான 62 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியது. 5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வணிக ரீதியில் செயற்கை கோள்களை அனுப்பி வருகிறது. அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை வணிக […]

Continue reading …

பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Comments Off on பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

மதுரா: பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பதவி ஏற்றது. மோடி அரசு ஆட்சிக்கு வந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டு நிறைவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரு வாரம் பெரிய அளவில் […]

Continue reading …

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் !

Comments Off on சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் !

சுவிட்சர்லாந்து: சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது சுவிட்சர்லார்ந்து அரசு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிட்சர்லாந்து அரசு. சுவிட்சர்லாந்து […]

Continue reading …