
நோக்கியா நிறுவனம் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் பற்றிய மாஸ் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இவ்வாண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த […]
Continue reading …
பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் குணமடைய பிரார்த்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வாடிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் நடைபெறும் புனித […]
Continue reading …
பெண் மருத்துவர் ஒருவர் ரஷ்யா இராணுவத்தில் பாலியல் அடிமைகள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய பெண் மார்கரிட்டா ஐரோப்பிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் ராணுவ வீரர்கள் மனைவிகளாக பயன்படுத்தி வருகின்றனர். உயர் பதவியில் வகிக்கும் பெண்கள் முதல் சமையல், தூய்மை வேலை செய்யும் பெண்கள் வரை பாலியல் கொடுமை நடைபெற்று வருகிறது. இதை எதிர்க்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் […]
Continue reading …
ஐரோப்பிய நாடுகளை விட்டு நோக்கியா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருடிய விவகாரத்தில் ஓப்போ, ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் ப்ராண்டுகளில் முக்கியமானவையாக இருப்பவை ஒன்ப்ளஸ், ஓப்போ நிறுவனங்கள். இந்நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. ஓப்போ, ஒன் ப்ளஸ் நிறுவனங்கள் மீது பின்லாந்தை தலைமையாக கொண்ட பிரபல […]
Continue reading …
ஈக்வடாரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தென்அமெரிக்க நாடான ஈக்டாரிலுள்ள குயாயாஸ் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானதாக வல்லுனர்கள் கூறினர். இதில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இச்சோகம் மறைவதற்குள், தற்போது மற்றோரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சிம்பொரொசா மாகாணம் அலுசி கண்டோன் நகரின் மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. […]
Continue reading …
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கேற்ப அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி சுவற்றில் துளையிட்டு கைதிகள் தப்பியுள்ளனர். “ஷஷாங்க் ரெடெம்ப்சன்” என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஆண்டி தான் சிறைவைக்கப்பட்டிருக்கும் அறையின் சுவரை கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டு கிளைமேக்ஸில் அதிலிருந்து தப்பி சென்று விடுவார். அதுபோன்று உண்மையாகவெ தற்போது ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள சிறைச்சாலையில் கடந்த 20ம் தேதியன்று சிறை கைதிகளை […]
Continue reading …
டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே இந்தியா, கனடா, பெல்ஜியம், ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறியிருந்தததாவது “நாட்டில் அரசு அலுவலங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது. ரஷியா நாட்டிலும், டிக்டாக், ஸ்னாப் சாட், டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற ஆப்கள் பயங்கரவாத ஆப்களாக […]
Continue reading …
ரூ.33 கோடியை பிரேக் அப் ஆன காதலர்களுக்கு கவுன்சிலிங்கிற்கு ஒதுக்கி உள்ளது நியூஸிலாந்து அரசு. காதலிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காதல் தோல்வியடைந்தால் மனமுடைந்து விடுகின்றனர். இதனால் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். காதல் தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சாரக் குழுவை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு 33 கோடி ஒதுக்கி உள்ளது. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வர ஆலோசனை வழங்குவது, இளைஞர்களை […]
Continue reading …
டுவிட்டர் நிறுவனம் ப்ளூ டிக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளமான டுவிட்டரை உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ப்ளூ டிக்குகளுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் அறிவித்தது. கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் நடைமுறைக்கு முன்னதாகவே ப்ளூ டிக்கை இலவசமாக […]
Continue reading …
அமெரிக்கா மாகாணத்தில் உள்ள கலிபோர்னியாவில் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயல் கடும் பாதிப்புகளையும்,300க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி புயலால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாய சக்திவாய்ந்த புயல் தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இதில், வீடுகளைச் சுற்றிலும் வெள்ள நீர்சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். […]
Continue reading …