Home » Archives by category » உலகம் (Page 41)

30 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் தியேட்டர்கள் திறப்பு!

Comments Off on 30 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் தியேட்டர்கள் திறப்பு!

30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் திரையரங்குகளை திறக்க ஜம்மு-காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று ஜம்மு காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திறந்து வைக்கப்பட்டன. இந்த திரையரங்குகளை ஜம்மு -காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் சினிமா ரசிகர்கள் […]

Continue reading …

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு!

Comments Off on ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு!

கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு அமைய உள்ளது. இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள் சென்ற வார இறுதியில் பல தரப்பினருக்கும் சென்றுள்ள நிலையில், சுமார் 500 அரசு தலைவர்கள் மற்றும் முக்கியப் வெளிநாட்டு பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான தலைவர்கள் வணிக விமானங்களில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கு லண்டனில் உள்ள ஓரிடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் […]

Continue reading …

இந்தியாவை வந்தடையுமா கோகினூர் வைரம்?

Comments Off on இந்தியாவை வந்தடையுமா கோகினூர் வைரம்?

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா அமைப்பு கோகினூர் வைரத்தை உரிமை கோரியுள்ளது. 1850ல் இந்தியாவின் அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அரிய வகை வைரமான இது ஆண் அரசர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கும் சக்தி கொண்டது என நம்பப்பட்டதால் பெண்ணரசிகள் அணியும்படி மகாராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகாலமாக ராணி எலிசபெத் கிரீடத்தை அலங்கரித்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்கே திரும்ப அளிக்க வேண்டும் […]

Continue reading …

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு

Comments Off on பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில், “பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்களை நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Continue reading …

நூற்றாயிரம் ஆண்டுக்கு முன்பே அறுவை சிகிச்சையா?!

Comments Off on நூற்றாயிரம் ஆண்டுக்கு முன்பே அறுவை சிகிச்சையா?!

இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்ததாக கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் ஏற்கெனவே கருதியிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான அறுவை […]

Continue reading …

மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

Comments Off on மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப் “என்னை விட மோடியின் சிறந்த நண்பர் யாருமில்லை” என்று கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் அமெரிக்க பிரதமராக இருக்கும்போது, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து கவுரவித்தார். 2021ல் அவர் இரண்டாம் முறை […]

Continue reading …

விமான விபத்தில் 4 பேர் பலி!

Comments Off on விமான விபத்தில் 4 பேர் பலி!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 என்ற ஜெட் விமானம் ஒன்று ஸ்பெயின் மற்றும் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமான பைலட்டுகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்ததாகவும் […]

Continue reading …

ரஷ்ய தூதரகத்தில் மனித வெடிகுண்டு!

Comments Off on ரஷ்ய தூதரகத்தில் மனித வெடிகுண்டு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ரஷ்ய தூதரகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று வழக்கம்போல ரஷ்ய தூதரகம் செயல்பட தொடங்கிய நிலையில் பலரும் விசா பெற விண்ணப்பிக்க வந்துள்ளனர். அப்போது தூதரகம் அருகே பயங்கரவாதி ஒருவன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில், குண்டு வெடித்து பலரும் சிதறி விழுந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் […]

Continue reading …

மியான்மரில் முன்னாள் தலைவருக்கு சிறை தண்டனை!

Comments Off on மியான்மரில் முன்னாள் தலைவருக்கு சிறை தண்டனை!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மியான்மர் நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஆங் சான் சுகிக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த வழக்கில் […]

Continue reading …

இரட்டை டவர் இடத்தில் கோயிலா?

Comments Off on இரட்டை டவர் இடத்தில் கோயிலா?

நொய்டாவில் சமீபத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அக்கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் மற்றும் சிவன் கோயில் சிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கோயில் கட்ட வேண்டும் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் பரிந்துரைள்ளதாக கூறப்படுகிறது. இப்பரிந்துரையின் அடிப்படையில் அந்த இடத்தில் விரைவில் கோயில் கட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue reading …