Home » Archives by category » உலகம் (Page 45)

இன்று மலாலா தினம்!

Comments Off on இன்று மலாலா தினம்!

பாகிஸ்தானின் மிங்கோரா பகுதியை சேர்ந்த மலாலா யூசுப்சய். இவரை போற்றும் விதமாக இன்று மலாலா தினம் கொண்டாடப்படுகிறது. மலாலா யூசுப்சய் சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மலாலா குழந்தைகளின் கல்வி தொடர்பான சமூக சேவைகளிலும் ஆர்வமுள்ளவர். தாலிபான் அதிகாரமிக்க பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. 2009 முதலாக பிபிசிக்கு அங்கு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி குறித்து மலாலா தொடர்ந்து எழுதினார். இந்நிலையில்தான் 2012ம் ஆண்டில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தாலிபான் […]

Continue reading …

அமர்நாத்தில் கனமழை: பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on அமர்நாத்தில் கனமழை: பலி எண்ணிக்கை உயர்வு!

உலகின் மிகவும் பிரசித்திப்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் அச்சுறுத்தலால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பக்தர்கள் அமர்நாத் கோவிலுக்கு யாத்திரைக்கு சென்றனர். ஆனால் திடீரென மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழை காரணமாக சுமார் 40 பேரை காணவில்லை. […]

Continue reading …

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரிட்டன் பிரதமரா-?

Comments Off on இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரிட்டன் பிரதமரா-?

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் […]

Continue reading …

இலங்கை மக்கள் போராட்டம்!

Comments Off on இலங்கை மக்கள் போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறைந்தபாடில்லை. இதனால் அங்கு வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பறிதவித்து வருகின்றனர். இதனால் இலங்கையில் சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி உள்ளதால், பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இலங்கைக்கு சீனா, இந்தியா உட்பட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது எரிபொருள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. அதிபர் கோத்தப ராஜபக்சே மற்றும் பிரதமர் […]

Continue reading …

குரங்கு அம்மை வீரியம்!

Comments Off on குரங்கு அம்மை வீரியம்!

குரங்கு அம்மை வீரியம் நாளுக்கு நாள் 58 நாடுகளில், 6,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். முதன்முதலாக ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்நோயின் அறிகுறி கண்டறியப்பட்டது. இருந்தாலும், தற்போது ஆப்பிரிக்கா தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். உலக சுகாதார […]

Continue reading …

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு!

Comments Off on ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வை அந்நாட்டு ஊடகங்கள் வீடியோவில் வெளியிட்டுள்ளது. இதைதொடர்ந்து வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2012 முதல் 2020 வரை […]

Continue reading …

ஆயுதகிடங்கில் வெடிவிபத்து!

Comments Off on ஆயுதகிடங்கில் வெடிவிபத்து!

ஆயுத கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான அபியனில் இருக்கும் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏமனின் லாடர் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகளால் இந்த நகரம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. […]

Continue reading …

பெயிண்ட் அடிக்க ரூ.200 கோடி

Comments Off on பெயிண்ட் அடிக்க ரூ.200 கோடி

ஈபிள் டவருக்கு ஒலிம்பிக் விளையாட்டையொட்டி வண்ணம் பூசுவதற்கு ரூ.200 கோடி செலவிடப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் மிகப்பெரிய நகரம் மற்றும் சுற்றுலாத்தளதமாகும். இங்கு உள்ள ஈபிள் டவர் உலகின் மிக உயர்ந்த இரும்புக் கோபுரம். இதை காண லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். வரும் 2024ம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு ரூ.200 கோடி செலவு செய்யப்போகிறது அந்நாட்டு அரசு.

Continue reading …

உலகநாயகனுக்கு கோல்டன் விசா!

Comments Off on உலகநாயகனுக்கு கோல்டன் விசா!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலமானவர்களுக்கு அரசு அமீரகம் கடந்த சில காலமாக கோல்டன் விசா என்னும் சிறப்பு விஐபி விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன்பு சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கியது. தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue reading …

யாத்திரைக்கு முன்புதிவு!

Comments Off on யாத்திரைக்கு முன்புதிவு!

அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதற்கு 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று புனித யாத்திரை தொடங்கி உள்ளது. ஆண்டுதோறும் காஷ்மீரிலுள்ள அமர்நாத் குகைக்கோவிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க தரிசனம் செய்தவற்கு பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா […]

Continue reading …