Home » Archives by category » உலகம் (Page 48)

ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

Comments Off on ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் ஒரு பயங்கரவாத குழுக்கள் ஒரு கிராமத்தையே சூறையாடியுள்ள சம்பவம் நடந்தேறி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அபாயகரமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகளை அடக்க முடியாமல் புர்கினா பாசோ ராணுவமும் திணறி வருகிறது. அந்நாட்டின் கோம்பியா மாகாணத்திற்குள் புகுந்த பயங்கரவாத கும்பல் ஒன்று நள்ளிரவில் கிராமத்தையே சூறையாடியுள்ளது. அங்கிருந்த பொருட்களை அள்ளிக் கொண்டு […]

Continue reading …

நாயாக மாற 12 லட்சம் செலவு!

Comments Off on நாயாக மாற 12 லட்சம் செலவு!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்றவர் நாய்கள் மீது மிகவும் பிரியமாகவும், பாசமாகவும் இருந்துள்ளார். நாய்களை அதிகமாக பிடிக்கும் என்பதால் நாயைப் போலவே மாற முயற்சியெடுத்துள்ளார். நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது. நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து அந்த நாய் போன்ற உடையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

துப்பாக்கிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

Comments Off on துப்பாக்கிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 18 மாணவர்கள் 1 ஆசிரியர் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம் மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை குறைக்க துப்பாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் […]

Continue reading …

மீண்டும் வொர்க் ப்ரம் ஹோமா?

Comments Off on மீண்டும் வொர்க் ப்ரம் ஹோமா?

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் என்று அறிவித்துள்ளது. ஆம். உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அலுவலகம் செல்ல வேண்டியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக சூறைக்காற்று காரணமாக மரங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Continue reading …

ஏர்டெல் கட்டணம் மீண்டும் உயர்வா?

Comments Off on ஏர்டெல் கட்டணம் மீண்டும் உயர்வா?

ஏர்டெல்லின் கட்டண உயர்வால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏர்டெல், ஜியோ உள்பட முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரிபெய்டு கட்டணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் உயர்த்தியது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் மீண்டும் தனது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் வருவாயை 200 ரூபாய் என நிர்ணயம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Continue reading …

குரங்கு வைரஸ் நோய் பரவல்!

Comments Off on குரங்கு வைரஸ் நோய் பரவல்!

குரங்கு வைரஸ் என்ற நோய் 12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு பரவி உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளைத் திண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவுவதாக கூறப்படுகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்குச் சென்று லண்டன் திருப்பிய நிலையில் அவருக்குக் குரங்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்தனர். இந்நோய் […]

Continue reading …

வாட்ஸ் ஆப் சில ஐபோனுக்கு நிறுத்தமா?

Comments Off on வாட்ஸ் ஆப் சில ஐபோனுக்கு நிறுத்தமா?

மெட்டா நிறுவனம் சில ஐபோன் மாடல் போன்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுத்த முடிவு செய்துள்ளது. புதுப்பிக்கப்படாத மாடல்களில் வாட்ஸ் ஆப் விரைவில் நிறுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் என்பதால் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ் ஆப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது […]

Continue reading …

மின்னல் தாக்கி 33 பேர் பலி

Comments Off on மின்னல் தாக்கி 33 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கியதில் 33 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகாரில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் டுவிட்டரில் மக்கள் இறந்ததற்கு வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது […]

Continue reading …

அசாமில் மழையால் எட்டு லட்சம் மக்கள் பாதிப்பு

Comments Off on அசாமில் மழையால் எட்டு லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பெரும் வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நீர் வடியாததால் வெள்ளத்தால் வாடும் அசாம் மக்கள்- ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ளன. நகவோன் மாவட்டம் தான் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Continue reading …

கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் திரைப்படம்

Comments Off on கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் திரைப்படம்

நடிகர் மாதவன் நடித்துள்ள “ராக்கெட்டரி” திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட நிலையில் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்துள்ளனர். இப்படத்தை பார்த்து ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பார்த்திபன் […]

Continue reading …