
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது: “இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.“
Continue reading …
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். […]
Continue reading …
தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச் சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதரகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் […]
Continue reading …
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப் படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ளவேண்டும். ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் […]
Continue reading …
பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி இந்திய விஞ்ஞானி டாக்டர்.ராஜா விஜ்ய குமார் உருவாக்கியுள்ள வைரஸ் தீவிரத்தை குறைக்கும் சாதனம், உள்வெளியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், அரங்குகள் போன்றவை பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள இந்த சாதனம் வழி செய்கிறது. ‘Shycocan’ கார்ப்பரேஷன், ‘ஷைகோகான்’ எனும் பெயரில் இந்த உருளை வடிவிலான சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், கொரோனா வகையைச்சேர்ந்த வைரஸ்கள் பரவுவதில் இருந்து உள்புற பகுதியை பாதுகாப்பாக மாற்றுவதாக ஷைகோகான் […]
Continue reading …
பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் தற்போது ஆடியோ செயலி உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் சமூக வலைதளமாக முகநூல் உள்ளது. மிகச்சிறிய காலத்தில் வேகமாக தனது வளர்ச்சியை அடைந்த அந்த நிறுவனம் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளையும் கைப்பற்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆடியோ வடிவிலான செயலி உருவாக்கத்தின் பக்கம் முகநூல் நிறுவனம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளப்ஹவுஸ் போன்ற ஆடியோ உரையாடல் செயலியை உருவாக்கும் […]
Continue reading …
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டன. இதில் முந்திக்கொண்ட இந்தியா கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்தவகையில் பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்காளதேசம், மொரீஷியஸ், மியான்மர், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானியமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, […]
Continue reading …
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது, இதில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசிய சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சத்தில் மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இதில் மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில்638 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை […]
Continue reading …
அமெரிக்காவில் ஒரே கல்பாக ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியைக் குடித்து சாதனை படைக்க இருந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேலப்கன் என்ற 19 வயது இளைஞர் சக மாணவர்களுக்கு நடுவே சாதனை செய்வதாகக் கூறி 40 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியை குறைந்த நேரத்தில் குடிப்பதாக சவால் விடுத்திருந்தார். பின்னர் மாணவர்கள் எண்ணிக்கையைத் தொடங்கியதும் பாட்டிலைத் திறந்த அந்த இளைஞர் 18 வினாடிகளில் […]
Continue reading …
ஜெனிவா: கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பல கோடி பேர்களை பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாடுகளில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகம் செய்ய துவங்கிவிட்டன. இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக சுகாதார […]
Continue reading …