Home » Archives by category » உலகம் (Page 8)

‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on ‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்!

‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்! உலகிலுள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்கம் செய்து வருகிறது. தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான ‘நைக்’ நிறுவனம் 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ‘நைக்’ நிறுவனத்திற்கு லாபம் குறைந்து வருவதையடுத்து நிதி நிலைமையை சரி செய்வதற்காக பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான ‘நைக்’ நிறுவனம் […]

Continue reading …

கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

Comments Off on கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகினார். பின்னர் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகினார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போனில் தான் முழு தொடரிலிருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. ஐபிஎல் […]

Continue reading …

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!

Comments Off on ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்! ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாகப் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார்! தொடர் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக இவருக்குக் கூடுதலாக 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது! மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குறங்களுக்காக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது! இவர் அதிபர் புதினை […]

Continue reading …

அபுதாபியில் இந்து கோவில்! பிரதமர் மோடி திறந்து வைப்பு!

Comments Off on அபுதாபியில் இந்து கோவில்! பிரதமர் மோடி திறந்து வைப்பு!

பிரதமர் மோடி அபுதாபியில் 900 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு […]

Continue reading …

வடகொரியா தென்கொரியாவுக்கு இடையில் போர் தொடங்குமா?

Comments Off on வடகொரியா தென்கொரியாவுக்கு இடையில் போர் தொடங்குமா?

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியாவை வடகொரியா அழிக்கப்போவதாக எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைகள், அணு ஆயுத பரிசோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. அவ்வாறாக வடகொரியா சோதிக்கும் ஏவுகணைகள் தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்து அந்த நாடுகளை அச்சுறுத்தியும் வருகின்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தென் கொரியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் […]

Continue reading …

திடீரென சரிந்த சென்செக்ஸ்?

Comments Off on திடீரென சரிந்த சென்செக்ஸ்?

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவில் இருந்தது. தற்போது 590 புள்ளிகள் சரிந்து 71,561 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 21,749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று 500 புள்ளிகளுக்கு மேல் […]

Continue reading …

இந்தியா டூ மியான்மர் எல்லையில் வேலி!

Comments Off on இந்தியா டூ மியான்மர் எல்லையில் வேலி!

மத்திய அரசு இந்தியா டூ மியான்மர் எல்லை முழுவதையும் வேலி அமைத்து தடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு மணிப்பூர் இனக்குழுக்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மணிப்பூரின் மெய்தி இனக்குழுவினருக்கும், குகி இனக்குழுக்களுக்கும் இடையே கடந்தாண்டு முதலாக தொடர் மோதல் வன்முறைகள் நடந்து வருகிறது. மணிப்பூர் டூ மியான்மர் இடையேயான எல்லையை வேலி அமைத்து மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டில் அண்டை நாடான மியான்மரில் ஆங் சான் சூகியின் மக்களாட்சியை […]

Continue reading …

சிலியை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ! 46 உயிர்கள் பலி.

Comments Off on சிலியை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ! 46 உயிர்கள் பலி.

சிலியை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ! 158 இடங்களில் 7,000 ஹெக்டேர் பாதிப்பு, 46 உயிர்கள் பலி. அமேரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரம் வீடுகள் முற்றிலும் தீயின் பிடியில் சிக்கி எரிந்தன. இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 46  பேர் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ பரவாமல் தடுக்கும் […]

Continue reading …

அண்ணா நினைவு தினம்! ஸ்பெயினில் முதலமைச்சர் மரியாதை!

Comments Off on அண்ணா நினைவு தினம்! ஸ்பெயினில் முதலமைச்சர் மரியாதை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் […]

Continue reading …

PayPal நிறுவனம் 2500 ஊழியர்களை பணிநீக்கம்!

Comments Off on PayPal நிறுவனம் 2500 ஊழியர்களை பணிநீக்கம்!

பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் ஆன்லைன் கட்டண நிறுவனமான PayPal பணி நீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஏராளமான நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதில் மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் இருந்தன. தற்போது மீண்டும் வருமானத்தை அதிகரிக்கவும் நஷ்டத்தை குறைக்கவும் ஒரு சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகின் […]

Continue reading …