
நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் டப்பிங் பணிகளை முடிந்துள்ளனர். இன்று அஜீத் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்துள்ளார். அஜீத் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துவிட்டதால் “துணிவு” திரைப்படத்தின் அனைத்துப் பணிகளையும் அவர் முடித்து விட்டார்.
Continue reading …
நடிகர் சத்யராஜ் “இந்தியன் 2” திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக கேட்ட சம்பளத்தால் இயக்குனர் ஷங்கர் பதிலே சொல்லாமல் இருந்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்தில் […]
Continue reading …
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியருக்கு வாடகைதாய் மூலம் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இது தொடர்பான சர்ச்சைகள் இப்போது ஓய்ந்துள்ள நிலையில் குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து இருவரும் வீடியோ வெளியிட்டிருந்தனர். தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “மாயா” மற்றும் “கேம் ஓவர்” ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இப்போது “கனெக்ட்” படத்தின் […]
Continue reading …
“சுமோ” என்ற திரைப்படம் உருவாகி சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. “சுமோ” இத்திரைப்படம் இது முழுக்க முழுக்க சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியும், குழந்தைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட காமெடி கலந்த செண்டிமெண்ட் படமாக உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். “வணக்கம் சென்னை” படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார். இப்படத்திற்கு […]
Continue reading …“அவதார் 2” ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படத்திற்காக நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான புரோமோஷன் வைரலாகியுள்ளது. 2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ’அவதார்; தி வே ஆப் வாட்டர்’ என்ற இந்த படத்தின் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி டிரெயிலர்களும் நேற்று ஒரே […]
Continue reading …
நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி உலகின் உயர்ந்த கட்டிடத்தில் அவரது முகம் ஒளிர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் ரிலீஸாகாத நிலையிலும், அவரது மகன் ஆர்யன் கான் கைதான விவகாரத்திலும் பெரிதும் வருத்தத்தில் இருந்த ஷாருக்கான் அதிலிருந்து மீண்டு, “பதான்,” அட்லியின் “ஜவான்” திரைப்படங்களில் நடித்து வருகிறார். நேற்று இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் 57வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஐக்கிய அரபு […]
Continue reading …
கார்த்தி நடிப்பில் “சர்தார்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி வெற்றி பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. “விருமன்,” “பொன்னியின் செல்வனை” அடுத்து “சர்தாரும்“ வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் […]
Continue reading …
எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான […]
Continue reading …
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் “காந்தாரா” திரைப்படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படம் வெறும் 20 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நேற்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். அதன் பிறகு அவர் இயக்குனர் ரிஷப் […]
Continue reading …
இன்று சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். இந்நிலையில் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை […]
Continue reading …