நேற்று திடீரென ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது திரையுலகினர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்டாலும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருக்கும் வரை இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் நடிக்க தொடங்கியவுடன் தான் கருத்து வேறுபாடு அதிகரித்ததாகவும் குறிப்பாக நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை சைந்தவி விரும்பவில்லை என்றும் இவர்களது பிரிவுக்கு இது தான் காரணமாக இருக்கலாம் என்றும் […]
Continue reading …மலையாள படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். “மஞ்சும்மல் பாய்ஸ்,” “பிரேமலு” ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அவ்வகையில் தற்போது கட்டீஸ் கேங் என்ற மலையாள படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஓசியானிக் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கட்டீஸ் கேங்.” இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நிர்வாக […]
Continue reading …வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை இடத்தில் தொடங்கி பின் திருவள்ளூரில் நடைபெற்றது. இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாம். இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வருகிறார். […]
Continue reading …மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் ஆரோக்யமான திரைப்படங்களை கையாண்டு கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் “பிரேமலு,” “ப்ரமயுகம்,” “மஞ்சும்மள் பாய்ஸ்,” “ஆடு ஜீவிதம்,” “வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம்” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளன. இப்படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் மட்டும் மலையாள […]
Continue reading …இன்று நடிகர் தனுஷ் ரூ.1 கோடியை தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு வழங்கினார். புதிதாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது. இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி, நெப்போலியன் ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். […]
Continue reading …நடிகர் விஜய் சமீபத்தில் அவரது அரசியல் வருகையை அறிவித்தார். தற்போது அவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு […]
Continue reading …மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான “பிரேமலு,” “ப்ரமயுகம்,” “மஞ்சும்மள் பாய்ஸ்,” “ஆடு ஜீவிதம்,” “வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம்” ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த மாதம் ரிலீசான பஹத் பாசில் நடித்த […]
Continue reading …சமீபத்தில் “கள்வன்” திரைப்படம் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாரதிராஜா, இவானா, கேபிஒய் பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது. காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” திரைப்படம் ரசிகர்கள் […]
Continue reading …சாய்பல்லவியை விளம்பரத்தில் நடிக்க அழகுபொருள் நிறுவனம் ஒன்று கேட்டதற்கு மறுத்துவிட்டாராம். நடிகை சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் பிஸியாக வலம் வருகிறார். “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி சிறந்த டான்ஸரும் கூட. தொடர்ந்து இவர் நடித்த “மாரி 2,” “ஷ்யாம் சிங்கா ராய்” என பல திரைப்படங்களும் ஹிட்டானது. பிரபலமான நடிகர், நடிகைகளை பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதற்கான விளம்பர படத்தில் நடிக்க வைப்பது வழக்கம். […]
Continue reading …சமூகவலைதளங்களில் நடிகர் சிங்கம்புலி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சிகிச்சைக்கு பணம் கேட்டுள்ளதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. இயக்குனர் மற்றும் நடிகருமான சிங்கம் புலி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாகவும், அவருக்கு பணம் கொடுத்த உதவ வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சிங்கம்புலி, “எனது வீடியோ ஒன்றை வெளியிட்டு […]
Continue reading …