Home » Archives by category » சினிமா (Page 14)

சாதனை படைத்த பஹத் பாசில்!

Comments Off on சாதனை படைத்த பஹத் பாசில்!

மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே ஹிட்டான படங்களை கொடுத்து வருகிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான “பிரேமலு,” “பிரம்மயுகம்,” “மஞ்சும்மள் பாய்ஸ்,” “ஆடு ஜீவிதம்,” “வர்ஷங்களுக்கு ஷேஷம்“ மற்றும் “ஆவேஷம்” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த படங்கள் கேரளாவை தாண்டி பிற மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்படி கடந்த மாதம் ரிலீசான பஹத் […]

Continue reading …

தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ்!

Comments Off on தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ்!

சங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஜூலை மாதம் தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு பல்வேறு பிரச்னைகளை கடந்து தற்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து “இந்தியன் 2,” “இந்தியன் 3,” “கல்கி” மற்றும் “தக் லைஃப்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் “இந்தியன் 2” பாகங்களின் ஷூட்டிங் […]

Continue reading …

மஞ்சுமல் பாய்ஸ் நடிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

Comments Off on மஞ்சுமல் பாய்ஸ் நடிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சமீபத்தில் மிகப்பெரிய ஹிட்டான மலையாள திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் நடிகரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியுள்ளார். நடிகர் விஜய் முத்து நடிகராக முண்டாசுப்பட்டி விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிகராக வளர்ந்து வரும் நடிகர். சமீபத்திய ஹிட் ஆன மலையாள திரைப்படமான “மஞ்சுமல் பாய்ஸ்” படத்தில் இன்ஸ்பெக்டராக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Continue reading …

மெய்யழகன் பட ரிலீஸ் அப்டேட்!

Comments Off on மெய்யழகன் பட ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்தார் கார்த்தி. படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு “மெய்யழகன்” என்று டைட்டில் […]

Continue reading …

ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி!

Comments Off on ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி!

கடந்த 2013ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான “கலகலப்பு” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை. இப்போது “அரண்மனை 4” எடுத்து ரிலீஸ் செய்து அந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அடுத்து அவர் கலகலப்பு 3ம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் […]

Continue reading …

விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

Comments Off on விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் மே 1-ம் தேதி முதல் சேவை அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி […]

Continue reading …

டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

Comments Off on டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இதுகுறித்து மனோ கூறும்போது, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார். இது குறித்து டி இமான் கூறும்போது, “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக […]

Continue reading …

இயக்குனராக அறிமுகமாகும் மோகன் லால்!

Comments Off on இயக்குனராக அறிமுகமாகும் மோகன் லால்!

முதல்முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி அவரது இயக்கத்தில் முதல் படமாக ‘பரோஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் […]

Continue reading …

“அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

Comments Off on “அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

நகைச்சுவையோடு பேய்ப் படங்களில் தமிழில் 2014ல் வெளிவந்த “அரண்மனை” படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்குண்டு. அப்போது தொடங்கிய “அரண்மனை” வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் “அரண்மனை” படத்தின் 4ம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே 3ம் தேதி […]

Continue reading …

‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

Comments Off on ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

கடந்த ஏப்ரல் 11ம் தேதி விஜய் ஆண்டனி நடித்த “ரோமியோ” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தைப் பற்றி விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். விஜய் ஆண்டனி “பல நல்ல திரைப்படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவி ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் […]

Continue reading …