
2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் ஆசியுடன் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார், படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. நடிகை மகிமா நம்பியார் இக்கூட்டணியில் இணைந்துள்ளார்.
Continue reading …
தமிழில் “மாரி 2” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டோவினோ தாமஸ். சமீபத்தில் டோவினோ தாமஸ் நடித்த “மின்னல் முரளி” திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் “2493 FD.” இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் […]
Continue reading …
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’ ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடைசியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படம் “நாச்சியார்.” பின்னர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்து அந்த படத்தை […]
Continue reading …
பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சமீபத்தில் கலந்து கொண்டார். நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்து செய்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ரிலீசானது. அடுத்து “குஷி,” “யசோதா” மற்றும் “சகுந்தலம்” ஆகிய படங்கள் கைவசம் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அவ்வப்போது விவாகரத்து குறித்த கேள்விகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பிரபல […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் சூர்யா தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த “சூரரைப் போற்று” படம் 5 விருதுகளையும், இயக்குனர் வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” படம் 3 விருதுகளையும், யோகிபாபு நடித்த “மண்டேலா” படம் 2 விருதுகளையும் வென்றது. தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமைப்பட […]
Continue reading …
முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர். கமல்ஹாசன்- அர்ஜூன் இணைந்து நடித்த “குருதிப் புனல்,” நடிகர் விக்ரம் நடித்த “மீரா,” “வானம் வசப்படும்க” ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், முதல் இரு படங்கள் வெற்றியடைந்து, “வானம் வசப்படும்” தோற்றது. பல முன்னணி இயக்குனர்களிடன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர், படங்களை இயக்கவில்லை. இதுபற்றி அவர், “இயக்குனர் ஆகவேண்டுமென்று சில படங்களை இயக்கினேன். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதனால், […]
Continue reading …
இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் 2 திரைப்படம் 100வது நாளை கொண்டாடும் விதமாக இப்படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎப் 1 திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எப் 2 ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸானது. படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த […]
Continue reading …
ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரௌட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் “தி லெஜன்ட்.” இப்படம் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் […]
Continue reading …
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” திரைப்படம் மட்டும் 5 தேசிய விருதுகளை பெற்றதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 68வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அந்த வரிசையில் “சூரரைப் போற்று” திரைப்படத்திற்காக சிறந்த படம், நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்க்கும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கும் […]
Continue reading …
“ஓபன்ஹெய்மர்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பு. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டில் இன்செப்ஷன், டன்கிர்க், டார்க் நைட் உட்பட பிரபலமான பல படங்களை இயக்கியவர். கடந்த ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்களை குழப்பும் வகையில் பல அம்சங்களை இணைக்கும் உத்தியை கையாள்பவர் கிறிஸ்டபர் நோலன். தற்போது கிறிஸ்டோபர் நோலன் அணுகுண்டு […]
Continue reading …