Home » Archives by category » சினிமா (Page 160)

கோல்டன் விசாவை பெற்றார் நடிகர் நாசர்!

Comments Off on கோல்டன் விசாவை பெற்றார் நடிகர் நாசர்!

ஐக்கிய அரபு எமிரேட் நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாக்களை கடந்த சில நாட்களாக வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கியதை அடுத்து அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது […]

Continue reading …

“கேஜிஎப்” பட டயலாக்கில் கல்யாண பத்திரிக்கை!

Comments Off on “கேஜிஎப்” பட டயலாக்கில் கல்யாண பத்திரிக்கை!

நடிகர் யாஷின் “கேஜிஎஃப் 2” படத்தின் வசனத்தை சற்றே மாற்றியமைத்து அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “கேஜிஎப் 2.” இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் வசனங்களும், பாடல்களும் பலருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. படத்தில் ராக்கி பாய் டேஞ்சர் போர்டை நிமிர்த்தி வைத்துவிட்டு “எனக்கு வன்முறை பிடிக்காது.. ஆனால் வன்முறைக்கு […]

Continue reading …

காஜலுக்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்துக்கள்!

Comments Off on காஜலுக்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்துக்கள்!

காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கர்ப்பமாக இருந்து வந்த காஜல் அகர்வால் தன்னுடைய கர்ப்ப கால போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் பரிமாறி வருகின்றனர். காஜல் அகர்வால் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர்.   தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் […]

Continue reading …

“அகண்டா” திரைப்படம் தமிழில் ரிலீஸ்!

Comments Off on “அகண்டா” திரைப்படம் தமிழில் ரிலீஸ்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் “அகண்டா.”   தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது என்பதும் 60 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 150 கோடி வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டப் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பு […]

Continue reading …

“லெஜெண்ட்” பட பாடல் சாதனை!

Comments Off on “லெஜெண்ட்” பட பாடல் சாதனை!

சமீபத்தில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரின் திரைப்படமான “லெஜெண்ட்” படத்தின் பாடல் ஒன்று வெளியானது.   இந்த பாடல் யூ டியூபில் மிகவும் பிரபலமானது என்பதும் நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் போன்று, ஒரு புதுமுக நடிகரின் பாடல் யூடியூப்பில் சாதனை பெற்றுள்ளது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த குஷியோடு படக்குழுவினர் அடுத்த […]

Continue reading …

“பொன்னியின் செல்வன்” அப்டேட்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” அப்டேட்!

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.   இயக்குநர் மணிரத்னத்தின் தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இருக்கிறார். இந்த திரைப்படம் இரு பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் “நெஞ்சுக்கு நீதி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் வெற்றி பெற்ற “ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தின் ரீமேக் இது. நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” மற்றும் “வலிமை” ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் […]

Continue reading …

“பீஸ்ட்” படத்தின் 2ம் பாகமா?

Comments Off on “பீஸ்ட்” படத்தின் 2ம் பாகமா?

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “பீஸ்ட்”. இத்திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.   ரூ.150க்கும் கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 13ம் தேதி ரிலீனாது. இந்நிலையில், “பீஸ்ட்” திரைப்படத்தின் 2 வது பாகம் எடுக்க வாய்ப்புள்ளதாக இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார், மேலும், இப்படம் 2வது பாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் எனவும், அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் […]

Continue reading …

மூன்றாவது பாகம் எதிர்பார்க்கலாம்!

Comments Off on மூன்றாவது பாகம் எதிர்பார்க்கலாம்!

தமிழ் வருடப்பிறப்புக்கு வெளியான “கேஜிஎப் 2” திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் கடைசியில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப்-பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக […]

Continue reading …

விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

Comments Off on விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

இன்று திரையரங்குகளில் வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை விடியற்காலையிலேயே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கலவையான விமர்சனம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனிடையே சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ரசிகர்கள் வந்தனர். அப்போது மயிலாடுதுறை, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து 8 இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் படம் பார்க்க […]

Continue reading …