கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கோரிய கதிரேசன் என்ற முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷை மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் தனது மகன் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் சிறுவயதில் காணாமல் போன மகன்தான் தனுஷ் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. […]
Continue reading …ராதிகா மற்றும் சரத்குமார் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ஹெல்மேட் அணியாமல் சென்று வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தொகுதி நட்சத்திர களமாக உருவாகியுள்ளது. சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்தில் […]
Continue reading …“நாளை சம்பவம் உறுதி” என்ற பதிவை இயக்குனர் வெங்கட் பிரபு அவரது சமூக வலைதல பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கி வரும் “தி கோட்” திரைப்படத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் “கோட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது நடிகர் […]
Continue reading …அமலாக்கத்துறை கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9-ம் […]
Continue reading …வருகிற ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் நாட்டில் அதிமுக, திமுகவுக்கு எதிராக பாஜக போட்டியிடும் நிலையில், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர். விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று பிரசாரத்தில், “தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் மோடி. என்னை வெற்றிபெறச் செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்குச் சேவை செய்வேன். மதுரையில் […]
Continue reading …விஜய பிரபாகரன் தம்பி சண்முக பாண்டியனுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் […]
Continue reading …சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இப்படம் 2013ம் ஆண்டு வெளியான “தி பர்ஜ்” படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 22ம் […]
Continue reading …சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் “வேட்டையன்” திரைப்படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் […]
Continue reading …விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் ’கிழக்கு சீமையிலே’ கேரக்டர் போல் நடித்துக் காமிங்கள் என்று கேட்டுக் கொல்ல உடனே அவர் நடித்து காண்பித்தது வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக் தாகூர், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையே போட்டி சரிசமமாக இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் […]
Continue reading …இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது “தி கோட்” படத்தில் நடித்து வருகிறார். அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்துக்குப் பின் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் […]
Continue reading …