“இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தை அமீர் இயக்கி வருகிறார். இப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இப்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் திமுகவிலும் அயலக அணியில் பொறுப்பில் இருந்துள்ளார். ஜாஃபர் சாதிக்குடன் இணைந்து காஃபி ஷாப் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்த இயக்குனர் அமீர் மீது இது சம்மந்தமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் விளக்க அறிக்கையையும் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இப்போது […]
Continue reading …நடிகர் பிரஷாந்த் வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். 90களில் தமிழ் சினிமாவில் முன்னியாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட பிரஷாந்த் நடித்த “ஜீன்ஸ்,” “செம்பருத்தி,” “மஜ்னு” என பல திரைப்படங்களும் ஹிட்டானது. ஆனால் அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது. கம் பேக் கொடுக்கும் வகையில் இந்தியில் “ஆயுஷ்மான் குரானா” நடித்து ஹிட் அடித்த அந்தாதுன் படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் […]
Continue reading …இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உட்பட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “அச்சமின்றி தேர்வு எழுதுங்கள். இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]
Continue reading …சமூக வலைதளங்களில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின் போது அடித்து விட்டதாக நடிகை ஒருவர் பேட்டி அளித்ததாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அதற்கு அந்த நடிகை தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். மமீதா பைஜூ ‘வணங்கான்’ படத்தில் நடித்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின்போது அடித்ததாக கூறியதாக செய்திகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. தற்போது நடிகை மமீதா […]
Continue reading …“மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த வாரம் வெளியான மலையாள திரைப்படம். இத்திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது “மஞ்சும்மள் பாய்ஸ்.” படத்தில் கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தின் பல நாஸ்டால்ஜிக்கான தருணங்களை நினைவுப் படுத்தியுள்ளனர். குறிப்பாக படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் […]
Continue reading …நடிகை டாப்ஸி பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தமிழில் 2011ம் ஆண்டு வெளியான “ஆடுகளம்”திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பின் பல மொழி படங்களில் நடித்து தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக உள்ளார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த “சபாஷ் மிது” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் நிலவும் ஆணாதிக்கம் சம்மந்தமாக தொடர்ந்து பேசியும் வருகிறார். […]
Continue reading …“மிஷன் 1” திரைப்படத்தில் அருண் விஜய் கடந்தண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது. பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படம் ரிலீசானது. “கேப்டன் மில்லர்” மற்றும் “அயலான்” ஆகிய படங்களுக்கு நடுவே ரிலீசானாலும் இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க […]
Continue reading …ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் உலக பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது இந்திய ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உள்ளிட்ட சேவைகளில் ஒன்றிணைகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Viacom 18 இந்தியா முழுவதிற்கும் செய்தி சேனல்கள், எண்டெர்டியின்மெண்ட், ஸ்போர்ட்ஸ் சேனல்களை வழங்கி […]
Continue reading …நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் போட்டியிடப் போகும் தொகுதி குறித்தும் அறிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய, மாநில கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பலரும் புதிய கட்சிகளும் தொடங்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அரசியலில் களம் கண்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தனியாக இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியுள்ளதோடு, நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது […]
Continue reading …ப்ளூசட்டை மாறன் தியேட்டர்களில் ரிலீசாகும் திரைப்படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து பிரபலமானவர். இவர் கடந்த 2021ம் ஆண்டு “ஆண்ட்டி இந்தியன்” என்ற படத்தை எழுதி, இயக்கினார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியானது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது சுமாரான வசூலையே பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் சிறிய பட்ஜெட் படம் என்பதால் மற்ற வழிகளில் லாபம் பார்த்துவிட்டதாக […]
Continue reading …