Home » Archives by category » சினிமா (Page 32)

இப்போ புதுசா திரும்பி வந்துட்டேன்; ஜெயம் ரவி பேச்சு!

Comments Off on இப்போ புதுசா திரும்பி வந்துட்டேன்; ஜெயம் ரவி பேச்சு!

ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி […]

Continue reading …

இயக்குனரின் தேசிய விருதுகளை திருடிய கும்பல்!

Comments Off on இயக்குனரின் தேசிய விருதுகளை திருடிய கும்பல்!

“காக்கா முட்டை” பட இயக்குனர் மணிகண்டன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தேசிய விருது பெற்றவர். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் என்ற இருவரும் தினசரி வந்து நாய்க்கு உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. நேற்று […]

Continue reading …

“லால் சலாம்“ எதிர்பார்த்த அளவு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

Comments Off on “லால் சலாம்“ எதிர்பார்த்த அளவு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “லால் சலாம்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. இத்தரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இன்று இப்படம் வெளியாகியுள்ள நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் ரஜினிகாந்த் படத்திற்கான முதல் நாள் கொண்டாட்டங்கள் சுத்தமாக இல்லை […]

Continue reading …

நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

Comments Off on நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் வருகையை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை வெளியிட்டு உறுதிபடுத்தினார். அதற்கான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின் தனது 69வது படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சக நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் […]

Continue reading …

“லிங்கா” பட நடிகை சொத்து பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு!

Comments Off on “லிங்கா” பட நடிகை சொத்து பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு!

நடிகை சோனாக்ஷி சின்ஹா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்த திரைப்படம் “லிங்கா.” சோனாக்ஷி சின்ஹாவும் அவரது மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் சொத்தை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா பங்கேற்பதாக கூறி 25 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததை அடுத்து கொடுத்த பணம் திருப்பி கேட்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை சோனாக்ஷி சின்ஹா திருப்பி கொடுக்காததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் […]

Continue reading …

வைரமுத்து எச்சரிக்கை..!

Comments Off on வைரமுத்து எச்சரிக்கை..!

கவியரசு வைரமுத்து உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய எதிர் விளைவு குறித்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மனிதர்களுக்கான வேலைவாய்ப்பை செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக குறைந்து கொண்டே வருகிறது. முதல் கட்டமாக சேவை துறையில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோன நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் உற்பத்தி துறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு என்பதே மிக குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கவிதை […]

Continue reading …

விஜய்யிடம் தொலைபேசியில் என்ன பேசினார் ரஜினி?

Comments Off on விஜய்யிடம் தொலைபேசியில் என்ன பேசினார் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கட்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் கட்சிக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் […]

Continue reading …

முதலமைச்ரை சந்திக்கிறாரா கமல்?

Comments Off on முதலமைச்ரை சந்திக்கிறாரா கமல்?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும், முதலமைச்சரை சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 12ம் தேதி சென்னை திரும்பும் கமல்ஹாசன் அடுத்த நாளே முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாத நிலையில், 12ம் தேதிக்கு […]

Continue reading …

“புதுப்பேட்டை 2” படம் குறித்து அறிவித்த செல்வராகவன்!

Comments Off on “புதுப்பேட்டை 2” படம் குறித்து அறிவித்த செல்வராகவன்!

“என்.ஜி.கே” மற்றும் “நானே வருவேன்” ஆகிய படங்கள் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து “பகாசூரன்” திரைப்படம் ரிலீசாகி […]

Continue reading …

ராஷ்மிகா சம்பளத்தை உயர்த்தினாரா?

Comments Off on ராஷ்மிகா சம்பளத்தை உயர்த்தினாரா?

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ம் ஆண்டு “க்ரிக் பார்டி” என்ற கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த “புஷ்பா” முதல் பாகம், விஜய்யுடன் இணைந்து நடித்த “வாரிசு” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அவர் பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்த “அனிமல்” படம் விமர்சனங்களை தாண்டி வசூலில் சாதனையை படைத்தது. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளை தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் […]

Continue reading …