
இயக்குனர் அட்லி “ராஜா ராணி,” “தெறி,” “மெர்சல்” மற்றும் “பிகில்” என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்தார். அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கினார். செப்டம்பர் 7ம் தேதி 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த “ஜவான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். […]
Continue reading …
இயக்குனர் கார்த்திக் தங்கவேல் “அடங்கமறு” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் எதுவும் நடக்காத நிலையில் கடைசியாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இப்போது அந்த படமும் அடுத்த கட்டத்துக்கு […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான “ஜிகர்தண்டா 2” திரைப்படத்தை பார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் […]
Continue reading …
‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார். இந்நிகழ்ச்சியில் கார்த்தி “ஜப்பான்” திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது, ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக எனது கதாபாத்திரம் […]
Continue reading …
“இந்தியன் 2” கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். […]
Continue reading …
விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீசான “லியோ” திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தாய்லாந்துக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். இப்போது படத்தின் முக்கியமான தகவல் […]
Continue reading …
இயக்குனர் மிஷ்கின் தனது தம்பி அதித்யா இயக்கிக் கொண்டிருக்கும் “டெவில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். “டெவில்” படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கலவி” பாடல் என்ற முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. நேற்று மாலை “டெவில்” திரைப்படத்தின் இசை வெளியீடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் படத்தின் பாடல்களை மிஷ்கின் முன்னிலையில் இசைக்கலைஞர்கள் இசைத்து பாடினர். நிகழ்ச்சியில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின் […]
Continue reading …
“கேஜிஎப்” இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றுக்காக சுமார் 750 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்களில் […]
Continue reading …
ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். ஆனால் அதன் பின் “36 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார். ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். சில மாதங்களுக்கு […]
Continue reading …
இயக்குனரும், நடிகருமான சேரன் நடிப்பில் வெளியான திரைப்படம் “தமிழ் குடிமகன்.” இத்திரைப்படத்தைப் பற்றி கருத்துக் கூறிய ஒருவருக்கு, “காரில் போனால் என்ன பைக்ல போனா என்ன… போகும் இடம்தான் முக்கியம்’’ என்று சேரன் பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தமிழ்குடிமகன்.” சேரன் மற்றும் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் கீழ் சாதியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த கதையம்சம் கொண்டதாம். சேரனின் நடிப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை […]
Continue reading …