Home » Archives by category » சினிமா (Page 52)

ஜென்டில் மேன் 2 திரைப்பட அப்டேட்!

Comments Off on ஜென்டில் மேன் 2 திரைப்பட அப்டேட்!

“ஜென்டில் மேன் 2” திரைப்படத்தை மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம். கி.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, லதா, […]

Continue reading …

“வலைபேச்சு” அந்தனன் தமிழ் சினிமா குறித்து விமர்சனம்!

Comments Off on “வலைபேச்சு” அந்தனன் தமிழ் சினிமா குறித்து விமர்சனம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோர்பர் 19ம் தேதி வெளியான திரைப்படம் “லியோ.” உலகம் முழுதும் இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வருகிறது. இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்பட ரிலீஸுக்கு முன்பு, இப்பட ரிலீஸுக்குப் பின்பும் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் தன் வலைதள பக்கத்தில் “படிச்சவனோ, பாமரனோ, ஒரு […]

Continue reading …

லியோ படக்குழுவுக்கு காவல்துறையின் கட்டுப்பாடுகள்!

Comments Off on லியோ படக்குழுவுக்கு காவல்துறையின் கட்டுப்பாடுகள்!

சமீபத்தில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து படம் “லியோ.” இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 461+ கோடிகளை வசூலித்து ஹிட் அடித்துள்ளது. ஆனால் தற்போது விடுமுறை நாட்கள் முடிந்துள்ளதால் கலெக்‌ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. படத்தின் வசூலை பெருக்கும் வகையில் வெற்றிவிழாவை நவம்பர் 1ம் தேதி கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். […]

Continue reading …

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சி அறிவிப்பு!

Comments Off on இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சி அறிவிப்பு!

சமூக வலைதளத்தில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் நிவின் பாலி நடித்த “நேரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இத்திரைப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு “பிரேமம்” திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் மூலம்தான் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஆகியோர் பிரபலமானார்கள். இதையடுத்து “அவியல்” மற்றும் நயன்தாரா நடித்த […]

Continue reading …

இயக்குனரை புகழ்ந்த கார்த்தி!

Comments Off on இயக்குனரை புகழ்ந்த கார்த்தி!

நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் “ஜப்பான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். இத்திரைப்படம் கார்த்தியின் 25வது படம். இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் அமீர் கார்த்தியின் முதல் திரைப்படத்தை இயக்கியவர். ஆனால் இவ்விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் சமூகதளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். “பருத்திவீரன்” ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்!

Comments Off on விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் புஸ்சி ஆனந்த் ‘தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், […]

Continue reading …

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்!

Comments Off on ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்!

கடந்த 5 நாட்களாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுவரை சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் […]

Continue reading …

அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிப்பு!

Comments Off on அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிப்பு!

நடிகர் அஜீத் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார். அந்த பகுதியில் சாலை விரிவாக்க மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், நடிகர் அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த பணிக்காக அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இன்று காலை இடிக்கப்பட்டது. இந்த பணிகள் மூலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் மழை நீர் வடிகால் வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் […]

Continue reading …

நடிகை கவுதமிக்கு குஷ்பு புகழாரம்!

Comments Off on நடிகை கவுதமிக்கு குஷ்பு புகழாரம்!

நடிகை குஷ்பு பாஜகவிலிருந்து நடிகை கவுதமி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என்று வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் […]

Continue reading …

‘பில்டப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Comments Off on ‘பில்டப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “தில்லுக்கு துட்டு 1” மற்றும் “தில்லுக்கு துட்டு 2” ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை தேடித்தந்தன. இப்போது சந்தானம் 80ஸ் “பில்டப்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “குலேபகாவலி” மற்றும் “மகளிர் மட்டும்“ ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் இயக்குனர் கல்யாண் 18 நாட்களில் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue reading …